தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் இந்த படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உலகம் முழுவதும் சேர்த்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் நடந்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் இதுவரை நடைபெற்றுள்ள முன் பதிவால் 10 லட்சம் ரூபாய் வசூல் கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
