தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. முதல் நாளில் மட்டுமே தமிழகத்தில் 37 கோடி வசூல் உலக அளவில் 72 கோடி வசூல் என வசூல் சாதனை படைத்து வருகிறது.
தமிழகம் மட்டுமல்லாமல் தெலுங்கானா ஆந்திரா கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த படம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இந்த மாநிலங்களிலும் படம் எவ்வளவு வசூல் கிடைத்துள்ளது. எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த விவரங்கள் இதோ
1. கேரளா – ரூபாய் 1.2 கோடி
2. கர்நாடகா – ரூபாய் 3.8 கோடி
3. ஆந்திரா மற்றும் தெலுங்கானா – ரூபாய் 1.8 கோடி
வார விடுமுறை நாட்கள் என்பதால் இன்றும் நாளையும் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தயாரிப்பாளர் போனி கபூர் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் வலிமை திரைப்படம் பெரிய ஓப்பனிங்கை கொடுத்திருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.