தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம், இந்தியளவில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வலிமை படத்தின் பர்ஸ்ட் சிங்கள் நேற்று எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி வெளியிடப்பட்டது, இரவு 10.45 மணிக்கு வெளியான நாங்க வேற மாறி பாடல் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது அப்பாடல் செய்துள்ள சாதனைகள் குறித்து பார்ப்போம், நாங்க வேற மாறி ஒளிபரப்பாகையில் 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் நேரடியாக பார்த்துள்ளனர். இதுவே இந்தியளவில் எந்த ஒரு பாடலும் படைத்திராத சாதனை.
இப்போது இந்த பாடல் 6 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது, மேலும் 884 K லைக்ஸ்களை பெற்று ட்ரெண்டிங் NO.1-ல் இருந்து வருகிறது.