Tamilstar
News Tamil News

வலிமை தீம் மியூசிக் எப்படியிருக்கும் தெரியுமா? யுவன் வெளியிட்ட செம்ம மாஸ் தகவல்

அஜித் தற்போது தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகராக திகழ்பவர், இவருக்கென்று தமிழில் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது.

அதனை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார்.

மேலும் இப்படத்தின் 50 சதவீத படபிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா காரணத்தினால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடல் நடித்தியுள்ளார்.

அப்போது வலிமை திரைப்படத்தின் bgm குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்த அவர் “அதற்கான வேலைகள் நடந்து வருகிறது, தற்போது நிலவும் சூழலினால் வேளைகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளதாகவும்” கூறியுள்ளார்.