தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவருக்குமே உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள காரணத்தினால் இவர்களின் படங்கள் எப்போதும் வசூல் ரீதியாக மாபெரும் சாதனை படைத்து வருகின்றன.
வெள்ளித்திரை போலவே சின்னத்திரையில் இந்த படங்கள் முதல் முறையாக ஒளிபரப்பப் படும் போது டிஆர்பி யில் எவ்வளவு ரெடிங் வருகிறது என்பது குறித்தும் ரசிகர்கள் கவனிக்க தொடங்கி விட்டனர். தற்போது வரை விசுவாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது திரைப்படமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் அஜித்தின் பிறந்த நாள் மற்றும் உழைப்பாளர் தினமான மே ஒன்றாம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வலிமை திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இதற்குப் போட்டியாக சன் டிவியில் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
நேருக்கு நேராக அஜித்தை தொலைக்காட்சிகளில் மோதிக்கொள்ள உள்ள நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் ஜெயிக்கப்போவது யாருடைய படம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தைப் பெற போவது எந்த திரைப்படம் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
