தெலுங்கு திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வம்சி படைப்பள்ளி. இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 67 திரைப்படம் குறித்து அதிகாரவபூர்வமான அறிவிப்பு நேற்றைய தினம் வெளியானது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் இப்படம் குறித்த அறிவிப்பால் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உற்சாகமடைந்து இருந்த நிலையில் இது குறித்து பதிவிட்டிருந்த லோகேஷ் கனகராஜின் பதிவிற்கு இயக்குனர் வம்சி வாழ்த்துக்களை தெரிவித்து ரீ ட்வீட் செய்திருக்கிறார்.
அதில் அவர், “தளபதி 67 படத்தின் போஸ்டர் மிகவும் பவர்ஃபுல்லாக இருக்கிறது, இந்த ஜோடியின் மற்றொரு படைப்பை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். படத்தில் எல்லாமே சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் பிரதர்” என்று குறிப்பிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
This is a very powerful image @Dir_Lokesh… can't wait to watch yet another stunner in this combination of @actorvijay Sir and You…. Wishing You the best of everything brother… 🙂#Thalapathy67 https://t.co/lLaRrJXaTI
— Vamshi Paidipally (@directorvamshi) January 30, 2023