Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாடல்களே இல்லாமல் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாணி போஜன்

Vani Bhojan plays the heroine in the film which is made without songs

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். அந்த படத்தில் வாணி போஜன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில், விக்ரம் பிரபு ஜோடியாக ‘பாயும் ஒளி நீ எனக்கு’, சசிகுமாருக்கு ஜோடியாக ‘பகைவனுக்கு அருள்வாய்’, விக்ரமின் ‘சியான் 60’, சூர்யா தயாரிக்கும் 2 படங்கள், ராதாமோகன் இயக்கும் படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார் வாணி போஜன்.

இந்நிலையில், அவர் அடுத்ததாக பரத்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை அறிமுக இயக்குனர் சக்திவேல் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார், துளசி, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பாடல்களே இல்லாமல் இப்படம் உருவாகி வருகிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.