Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராதாமோகன் இயக்கத்தில் நடிக்கும் வாணி போஜன்

Vani Bhojan starring in the Radha Mohan director

‘அபியும் நானும்’, ‘மொழி’, ‘பயணம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் ராதா மோகன். இவர் அடுத்ததாக, வைபவ் – வாணி போஜன் நடிக்கும் இந்த முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மங்கி மேன் கம்பெனி இப்படத்தைத் தயாரிக்கிறது. பிரேம்ஜி இசையமைக்கும் இப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.

படம் குறித்து இயக்குநர் ராதாமோகன் கூறுகையில், ”ஓடிடியில் இது எனது முதல் படம். மிகச்சிறந்த முறையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்து அனைவரும் அற்புதமாக நடிக்கிறார்கள். வைபவ், வாணிபோஜன், கருணாகரன் மற்றும் என் நண்பர் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோருடன் இப்படத்தில் கை கோர்ப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி’’ என்றார்.