தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்ததை தொடர்ந்து ஹாட் ஸ்டார் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்களில் ஒருவராக வனிதா பங்கேற்றிருந்தார்.
கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக இதிலிருந்து விலகிக் கொண்டார். இதனையடுத்து கமலுக்கு பதிலாக நடிகர் சிம்பு இந்த வாரம் முதல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
கமல்ஹாசன் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டதும் வனிதா விஜயகுமார் உடல்நிலை மற்றும் மனநிலை காரணமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அவர் தற்போது விஜய் டிவி பாலாவுடன் இணைந்து பிரபல பிரியாணி கடை விளம்பரத்தில் நடித்துள்ளனர்.
இதுகுறித்த புகைப்படத்தை வனிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram