பவர்ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா விஜயகுமார் ஜோடியாக நடிக்கும் படம் ‘பிக்கப்’. இப்படத்தில் இவர்களுடன் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் உரிமையாளரான தமிழ்செல்வன், செந்தில், ரோஷன், ஜி.பி.முத்து, மீனாட்சி காயத்திரி, ஹர்சிதாதேவி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
பவர்ஸ்டாரை மூன்றாவதாக மணமுடித்து ஒரு பங்களாவுக்கு குடியேறும் வனிதா, அந்தபங்களாவில் பேய்களின் அட்டகாசம் இருப்பதை அறிந்த இருவரும் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை திரில், திகில், காமெடி கலந்து உருவாக்கி வருகிறார்கள்.
இப்படம் குறித்து கூறும் பவர்ஸ்டார் சீனிவாசன், ‘இப்படம் எனக்கு நூறாவது படமாகும். என் திரை உலக அனுபவங்களை கொண்டு இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கத்துடன் செமத்தியான பாடல்களுக்கு ட்யூன் போட்டு இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கிறேன். இந்தப் படத்தோட டைட்டிலில் வனிதாவுக்கு “வைரல் ஸ்டார்” என்ற பட்டத்தோடு பெயரை போடுகிறோம்”. என்றார்.