தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் அடுத்த இன்னிங்சை தொடங்கி சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் தைரியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் வனிதா விஜயகுமார்.
படங்களில் அயிட்டம் பாடலுக்கு நடனம் ஆடுவது என கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி வருகிறார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று சில வாரங்களில் வெளியேறிய இவர் கமல்ஹாசன் வெளியேறியதற்கு காரணம் நிகழ்ச்சி சரியான பாதையில் செல்லாது தான் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் சில புகைப்படங்களை வெளியிட்டு நான் பல வருடங்களுக்கு முன்னரே புத்த மதத்தை பின்பற்ற தொடங்கினேன். தற்போதும் அதே தான் பின்பற்றி வருகிறேன், அதிலிருந்து பின்வாங்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.
தான் பின்பற்றும் மதம் குறித்து பல வருடங்களுக்கு பிறகு வெளிப்படையாக வனிதா விஜயகுமார் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram