தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வத்திக்குச்சி வனிதாவாக வலம் வர தொடங்கினார்.
தொடர்ச்சியாக படங்கள், சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என படு பிசியாக இருந்து வருகிறார். ஏற்கனவே இரண்டு திருமணம் செய்த வனிதா மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொள்ள கடைசியில் அதுவும் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் நான்காவது திருமணம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் எங்களையும் கல்யாணத்துக்கு அழையுங்கள் என கோரிக்கை வைக்க நான்காவது திருமணத்துக்கு போஸ்டர் அடித்து தமிழ்நாட்டையே இன்வைட் பண்ணுவேன் என தெரிவித்துள்ளார்.