தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜோவிகா வெளியேற்றப்பட்டார்.
ஜோவிகாவின் வெளியேற்றத்திற்கு வாய்ப்பே கிடையாது அது Unfair எவிக்ஷன் என வனிதா கூறி வந்தார். அதன் பிறகு இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்று இருந்தவர்களுடன் நிக்சன் குறைந்த ஓட்டுக்களுடன் இருந்து வந்தார்.
ஆனால் michaung புயல் காரணமாக இந்த வார எலிமினேஷன் தடை செய்யப்படுவதாக தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில் அர்ச்சனா மற்றும் நிக்சன் இடையே ஏற்பட்ட மோதல் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது.
தகாத வார்த்தைகளில் பேசுவதும் சொருகிடுவேன் என அர்ச்சனாவுக்கு வார்னிங் கொடுப்பதும் என நிக்சன் எல்லை மீறி வருகிறார். இந்த நிலையில் வனிதா என் பொண்ணு வெளியே வந்தது நல்ல விஷயம். இந்த நிகழ்ச்சி ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு தடை செய்யணும் என ட்வீட் போட உங்க பொண்ணு வெளியே வந்ததும் இப்படி சொல்லிக்கிட்டு இருக்கீங்களா என்று விமர்சனங்கள் எழ தனது பதிவை டெலிட் செய்துள்ளார்.
பிறகு எக்ஸ் தளமும் வண்ணம் நிறைந்ததாகி விட்டது. இதிலிருந்தும் வெளியேறுகிறேன் என பதிவு செய்துள்ளார் வனிதா.