தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருப்பவர் ஜோவிகா விஜயகுமார். ஆரம்பத்தில் ஆக்டிவான போட்டியாளராக இருந்த இவர் தற்போது தூங்கிக் கொண்டே இருப்பது போலவே காட்டப்பட்டு வருகிறார்.
இதற்கான காரணம் என்ன என்பது குறித்து வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். அதாவது ரசிகர் ஒருவர் இது குறித்து கேள்வி எழுப்ப ஜோவிகா தற்போது மன உளைச்சலில் இருக்கிறாள். அந்த வீட்டில் இருக்கும் போது நானும் அப்படித்தான் இருந்தேன்.
எனக்கு முகத்தில் ஏற்பட்ட காயம் குறித்து அவளுக்கு உணர்வு ரீதியாக தெரிந்து இருக்கலாம். ஆகையால் இப்படி தூங்கிக் கொண்டே இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.