பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 மூலம் மீண்டும் வாழ்வில் வெளிச்சத்திற்கு வந்தவர் வனிதா. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் நேற்று முன்தினம் பீட்டர் பால் என்பவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
வனிதாவின் வீட்டிலேயே இந்த திருமணம் நடைபெற்றது. திரையுலகில் நேற்று முன்தினம் ஹாட்டான டாப்பிக் வனிதாவின் இந்த திருமணம் தான்.
இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி சென்னை வடபழனி போலிஸில் பீட்டர் மீது புகார் அளித்துள்ளாராம். இதில் அப்பெண் தனக்கு சட்ட ரீதியான விவாகரத்து கொடுக்காமலேயே வனிதாவை திருமணம் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இது குறித்து வனிதா இப்பிரச்சனை நான் எதிர்பார்த்தது தான். கடந்த 8 வருடங்களுக்கு முன்னரே பீட்டர் அவரை பிரிந்து விட்டார். நாங்கள் திருமணம் செய்வது அவருக்கு தெரியும். பணம் பறிப்பதற்காக வேண்டும் என்றே இதுபோல செய்கிறார். ரூ 1 கோடி பணம் கேட்டு பிளாக் மெயில் செய்துள்ளார்.
இதை சட்ட ரீதியாக சந்திக்க இருக்கிறோம். சினிமாவில் இருக்கும் நான் இதுபோல நிறைய பார்த்துவிட்டேன். இது எங்கள் வாழ்க்கையை பாதிக்காது என வனிதா கூறியுள்ளார்.