தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குகொண்ட வனிதா விஜயகுமார் இதனைத் தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
சக போட்டியாளர்களுடன் தொடர்ந்தது பிரச்சனைகள் ஏற்பட்டு வந்த நிலையில் உடல்நிலை மற்றும் மனநிலையை கருத்தில் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். வீட்டை விட்டு வெளியே வந்த அவரை பலரும் திமிர் பிடித்தவர் என நெகட்டிவ் விமர்சனங்களை பதிவு செய்து வந்தனர்.
இந்த நிலையில் வனிதா விஜயகுமார் ஆமாம் நான் திமிர் பிடித்தவள் தான். எனக்கு நான்தான் முதல் முன்னுரிமை. நான் இப்படித்தான் என பதிலடி கொடுத்துள்ளார். இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram