தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் வனிதா ஷாப்பிங் செய்ய அவரை பயங்கர கடுப்பு ஏற்றியுள்ளார் நிகழ்ச்சித் தொகுப்பாளர்.
தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மிகவும் பிரபலமடைந்த கடையின் அடுத்த கிளையாக சென்னை உஸ்மான் ரோட்டில் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ஏழு அடுக்கு தளத்துடன் பிரம்மாண்ட கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் இந்த கடைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சாதாரண மக்களைப் போலவே பல திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளனர். அதுகுறித்த வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே வனிதா விஜயகுமார் இருமுறை இந்த கடையில் ஷாப்பிங் செய்திருந்த நிலையில் தற்போது தீபாவளி ஷாப்பிங் செய்துள்ளார்.
அவரை அவருடன் சேர்ந்து ஷாப்பிங் செய்த தொகுப்பாளர் பயங்கர கடுப்பேற்றியுள்ளார். வனிதாவும் தொகுப்பாளரும் சேர்ந்து செம கலக்கலாக ஷாப்பிங் செய்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.