நடிகை வரலெட்சுமி பெண்களுக்கும். குழந்தைகளுக்கும் நடக்கும் கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். இதற்காக அவர் சேவ் சக்தி என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.
கடந்த இரு நாட்களாக தமிழக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள விசயம் புதுக்கோட்டை அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம்.
இந்நிலையில் டிவிட்டரில் அவர் வீடியோ வெளியிட்டு தன் கருத்தை இச்சமபவத்திற்கு வெளிப்படுத்தியுள்ளார். “என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? இன்னொரு குழந்தை கொடூரமாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது.
இதுதான் நாம் வாழும் உலகமென்றால் நம் அனைவருக்கும் கோவிட் வந்து இறக்க, நாம் உரியவர்களே. ஒரு வேளை இதுதான் மனிதர்களாகிய நமக்குக் கடவுளின் பதில் என நினைக்கிறேன். நாம் வாழத் தகுதியற்றவர்கள்” என்று தெரிவித்தார்.
குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். இதுபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும். அப்படி என்றால் தான் அவர்கள் இதுபோன்ற தவறு செய்யமாட்டார்கள் என தமிழக முதல்வரிடம் கேட்டுள்ளார்.
#JusticeforJayapriya #deathpenaltyfornrape @CMOTamilNadu @OfficeOfOPS please sir I’m begging you..on behalf of all the children and women who have been raped..pass the order..be the first state to be an example, that we will not tolerate the abuse of women and children..plzz.. pic.twitter.com/ezkoFu82D7
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath) July 3, 2020