கோலிவுட் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் அப்டேட்கள் இணையதளத்தில் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டத்தின் போஸ்டர் வைரலாகி வருகிறது.
அதாவது வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாகி வசூல் வேட்டையாடிய இப்படம் குடும்பங்களால் தற்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஓ டி டி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்தும் ஒரு சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதை அண்மையில் ரசிகர்கள் திரையரங்குகளில் செலபிரேட் செய்து கொண்டாடி இருந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் வைரலானதை தொடர்ந்து தற்போது படக்குழுவும் சிறப்பு போஸ்டரை பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. அந்த போஸ்டர் தற்போது ரசிகர்களை கவர்ந்து இணையதளத்தை தெறிக்க விட்டு வருகிறது.
Glorious 50th day for the #MegaBlockbusterVarisu 🔥
To all the fans & families who showered us with abundant love ❤️
A memorable journey to cherish nanba 🤩#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @7screenstudio @TSeries #Varisu#Varisu50thDay pic.twitter.com/wMISUkF9Xe— Sri Venkateswara Creations (@SVC_official) March 1, 2023