தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது.
வம்சி பைடபள்ளி இயக்க தமன் இசையமைக்க தில் ராஜு இந்த படத்தை தயாரித்துள்ளார். படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் நேற்று முன்தினம் வெளியானது. 24 மணி நேரத்தில் இந்த பாடல் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இது குறித்து பாடல் ஆசிரியர் விவேக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள பதிவு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
Ranjithame at World No 1 and with 18.5 M real time views in 24 hours its Thalapathy wave all around !! Thank you for the reception, heartwarming comments and love. Love you all ❤️ pic.twitter.com/N2TZTiwgs1
— Vivek (@Lyricist_Vivek) November 6, 2022