Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு படத்தில் இசை வெளியீட்டு விழா எங்கே நடக்கப் போகிறது தெரியுமா?வைரலாகும் சூப்பர் தகவல்

varisu movie audio-launch-details

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து 2023 பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், யோகி பாபு, நடிகர் ஷாம், ஜெயசுதா, குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு அரங்கத்தில் நடைபெற இருப்பதாக தெரியவந்துள்ளது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

varisu movie audio-launch-details
varisu movie audio-launch-details