Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு படத்தில் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? வைரலாகும் சூப்பர் ஹிட் தகவல்.

varisu movie audio launch latest update

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் தமன் இசையில் உருவாகி இருந்த இரண்டு பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இணையத்தில் வைரலானது. ஆனால் இது தொடர்பான அதிகாரவபூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவராமல் இருக்கும் நிலையில் தற்போது இந்த தகவலை இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஷாம் அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் உற்சாகமடைந்த விஜய் ரசிகர்கள் இந்த தகவலை இணையதளத்தில் தீயாக பரப்பி வருகின்றனர்