Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து அப்டேட் கொடுத்த படக்குழு..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

varisu-movie-first-single-promo-release-announcement

தென்னிந்திய திரை உலகில் இளைய தளபதி ஆக வளம் வருபவர் தான் விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், யோகி பாபு, குஷ்பூ, பிரபு, சங்கீதா, ஷாம், ஸ்ரீகாந்த் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தில்ராஜ் தயாரிப்பில் தமன் இசையில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாடல் இந்த வாரத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது இப்பாடலுக்கான ப்ரோமோ வெளியீட்டு நேரம் குறித்து அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி விஜயின் வாரிசு திரைப்படத்தில் விஜய் குரலில் உருவாகி இருக்கும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கான ப்ரோமோவை நவம்பர் 3ஆம் தேதியான இன்று மாலை 6:30 மணி அளவில் வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த தகவலால் உற்சாகமடைந்த விஜய் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இதனை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.