Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு படத்திலிருந்து வெளியான ஜிமிக்கி பொண்ணு பாடல் வீடியோ

varisu movie jimikki ponnu song video release update

வாரிசு திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ரசிகர்களின் ஃபேவரைட் பாடலான ஜிமிக்கி பொண்ணு பாடல் வீடியோ வெளியானது. தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியானது. வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வசூல் வேட்டையாடி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் தமன் இசையமைத்திருந்த அனைத்து பாடல்களும் வெகுவாக ரசிகர்களை கவர்ந்த நிலையில் இப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் ஹாட்டான நடனத்துடன் இடம்பெற்றிருந்த ஜிமிக்கி பொண்ணு பாடல் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்திருந்தது. தற்போது இப்பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் மிகுந்த ஆர்வத்தில் இருந்த ரசிகர்கள் இந்த வீடியோவை மகிழ்ச்சியுடன் வைரலாக்கி வருகின்றனர்.