தளபதி விஜய் அவர்கள் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், யோகி பாபு, குஷ்பூ, பிரபு, சங்கீதா, ஷாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தில் தமன் இசையில் ஏற்கனவே வெளியாகி இருந்த மூன்று பாடல்கள் இணையதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து நேற்றைய தினம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் வாரிசு படத்தின் மீதமுள்ள ஜிமிக்கி பொண்ணு மற்றும் வா தலைவா ஆகிய இரண்டு பாடல்கள் வெளியானது. இதில் ஜிமிக்கி பொண்ணு என்னும் பாடல் ரசிகர்களை கவர்ந்து அதிக அளவில் வைப் செய்து ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
Jimikki Ponnu – Repeat Mode.!😉🎧 #Varisu #VarisuPongal #Beast pic.twitter.com/BcfVj4WRpP
— Arun Vijay 🔰 (@ArunVJ_VFC) December 25, 2022