Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு பட சக்சஸ் பார்ட்டியில் sj சூர்யா. வீடியோ வைரல்

varisu movie success party celebration sj suriya

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் வாரிசு. பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றாலும் தொடர்ந்து வசூல் ரீதியாக மாஸ் காட்டி வருகிறது.

ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகி பாபு, நடிகர் ஷாம், ஜெயசுதா என பலர் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர். ஏற்கனவே படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் உட்பட சிலர் மட்டும் பங்கேற்று படத்தின் வெற்றியை கொண்டாடி இருந்த நிலையில் தற்போது தளபதி விஜய், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் சாம், பாடலாசிரியர் விவேக் உட்பட பலர் இணைந்து படத்தின் வெற்றியை பார்ட்டி வைத்து கேக் கட் செய்து கொண்டாடியுள்ளனர்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் இந்தப் கொண்டாட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.