Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தமிழ்நாட்டில் வாரிசு படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனங்கள். வைரலாகும் லிஸ்ட்

varisu movie tamilnadu distribution latest update

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய் அவர்கள் வம்சி இயக்கத்தில் தமிழில் ‘வாரிசு’, தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரில் உருவாகும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகியுள்ளது. தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி, தில்ராஜ் தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்கள் இணையதளத்தை தெறிக்க விட்டதை தொடர்ந்து இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றி இருக்கும் நிறுவனங்களின் பட்டியலை படக்குழு சிறப்பு வீடியோவுடன் வெளியிட்டுள்ளது. அதில், (திருநெல்வேலி & கன்னியாகுமாரி – ஸ்ரீ சாய் கம்பெனிஸ் முத்துக்கனி), (மதுரை – ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ்), (திருச்சி, தஞ்சாவூர் – ராது இன்போடைன்மென்ட்), (சேலம் – கார்ப்பரேஷன் செந்தில்), (சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், நார்த் ஆற்காடு & சவுத் ஆற்காடு – ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி). ஆகிய பிரபல நிறுவனங்கள் வாரிசு திரைப்படத்தை கைப்பற்றி இருப்பதாக தகவல்களை அந்த வீடியோவில் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு வீடியோ தற்போது இணையத்தில் வரலாகி வருகிறது.