Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

11 நாளில் வாரிசு படத்தில் வசூல்.!! கொண்டாடும் ரசிகர்கள்

varisu movie trending hashtag collection update

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் ஆட்ட நாயகன் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் பல இடங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ரசிகர்களால் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையமைப்பில் வெளியான இப்படம் வெளியான முதல் வாரத்தில் 210 கோடிகள் வசூல் செய்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தற்போது படம் வெளியான 11 நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக புதிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் #MrNumberOneVIJAY என்ற ஹஸ்டேகுடன் ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.