தமிழ் சினிமாவில் பிரபலம் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே பெற்றிருக்கும் இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இதில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தில்ராஜ் தயாரிப்பில் தமன் இசையில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ரஞ்சிதமே பாடலின் ப்ரோமோ வீடியோ நேற்று முன்தினம் இணையதளத்தில் வெளியாகி அதிக பார்வையாளர்களைக் கடந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்பாடலின் முழு வீடியோ இன்று மாலை 5:30 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படக்குழு ரஞ்சிதமே பாடலுக்கான புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் மத்தியில் வேகமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
On screen chemistry 🤩🤩🤩 #Varisu @actorvijay @iamRashmika pic.twitter.com/NuEyeR4s2z
— Thalapathy Vijay Fans (@VijayFansPage) November 5, 2022