தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோட் முதல் மாரி முத்துவுக்கு பதிலாக ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.
இதனால் சீரியல் இனி அதிரடி சரவெடியாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் மாரிமுத்துவை காட்டிலும் வேல ராமமூர்த்திக்கு இரு மடங்கு சம்பளம் கொடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஆமாம் மாரிமுத்து ஒரு எபிசோடுக்கு இருபதாயிரம் சம்பளம் வாங்கி வந்த நிலையில் தற்போது வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு நாளைக்கு நாற்பதாயிரம் ரூபாய் சம்பளமாக வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சின்னத்திரையில் இதுவரை எந்த நடிகரும் வாங்காத அளவிற்கு வேல ராமமூர்த்தி சம்பளம் வாங்குவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.