தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்தவர் வெண்பா.
இந்த சீரியலை தொடர்ந்து தற்போது உப்பு புளி காரம் என்ற வெப் சீரிஸ் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று வரும் நிலையில் ஜீ தமிழ் சீரியல் வில்லியாக மாறியுள்ளார்.
ஆமாம் பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பாவாக நடித்த ஃபரீனா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் லாரா என்ற கதாபாத்திரத்தில் இச்சாதாரி நாகமாக நடிக்க உள்ளார்.
இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
