Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் மரணம்

Venkat Prabhu and Premji Amaran Mother passed away

இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவாராக விளங்கினார். இவரது மூத்த மகன் வெங்கட் பிரபு, வெற்றிகரமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம்வருகிறார். இளையமகன் பிரேம்ஜி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில், கங்கை அமரனின் மனைவியும், வெங்கட் பிரபு, பிரேம்ஜியின் தாயாருமான மணிமேகலை நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 69. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றிரவு 11:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.