தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபலம் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் வெங்கட் பிரபு. இவர் தற்போது இயக்கியிருக்கும் திரைப்படம் கஸ்டடி. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்க கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.
மேலும் இதில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்க சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ள இப்படம் வரும் மே 12 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்திருந்த நிலையில் இப்படத்தின் பிரமோஷன் பணிகளை படக்குழு தீவிரமாக நடத்தி வருகிறது. அந்த வகையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு வாரிசு திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு பேசிய ஸ்டைலில் பேசியுள்ளார். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர், “இந்த படத்தில் ஸ்டைல் வேணுமா ஸ்டைல் உந்தி, ஆக்ஷன் வேணுமா ஆக்சன் உந்தி, ஃபேமிலி செண்டிமெண்ட் வேணுமா ஃபேமிலி செண்டிமெண்ட் உந்தி ,என்ன வேணும் எல்லாம் உந்தி, இந்த படத்துல மாஸ் வேணுமா மாசும் உந்தி” என்ன பேசியுள்ளார்.
#Custody: Director #VenkatPrabhu makes a Dil Raju promise! pic.twitter.com/nkMITavljr
— AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) May 8, 2023