Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

venkat prabhu upcoming movie details

வெங்கட் பிரபு இயக்கம் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. தளபதி விஜய் நடிப்பிலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களது இந்த கூட்டணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

venkat prabhu upcoming movie details