தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்தவர் வெங்கடேஷ் பட்.
திடீரென இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். தாய்லாந்து சுற்றுலா சென்றுள்ள வெங்கடேஷ் பட் திடீரென அங்கிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் இவ்வளவு ஆதரவு கிடைக்கும்னு எதிர்பார்க்கல என்று நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் குறித்து பேசியுள்ளார். இதை ஆதரவை மக்கள் தொடர்ந்து தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்த இவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சி 4.4 என்ற அளவில் ரேட்டிங் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram