Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“சைந்தவ்” படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு. வைரலாகும் தகவல்

venkatesh movie release date update

விக்டரி வெங்கடேஷின் 75-வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சைந்தவ்’. ‘ஹிட்வெர்ஸ்’ படத்தை இயக்கிய சைலேஷ் கொலானு இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நவாசுதீன் சித்திக், ஆர்யா, ஷ்ரதா ஸ்ரீநாத், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா ஜெர்மியா, சாரா மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் வெங்கட் பொயனபள்ளி பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு எஸ். மணிகண்டன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பணிகளை கேரி பி.ஹெச். கவனித்துள்ளார்.சைந்தவ் போஸ்டர்இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சைந்தவ்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.”,

venkatesh movie release date update
venkatesh movie release date update