Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

வெந்து தணிந்தது காடு திரை விமர்சனம்

venthu thanithadhu kaadu movie review

கிராமத்தில் அம்மா ராதிகா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் சிம்பு. வயகாட்டில் வேலை செய்யும் போது, சிம்புவுக்கு விபத்து ஏற்படுகிறது. இவரை நினைத்து பயப்படும் தாய் ராதிகா, உறவினர் மூலம் வேறு வேலைக்கு அனுப்ப முயற்சி செய்கிறார். இந்நிலையில் உறவினர் தற்கொலை செய்து கொள்ள, அவருடன் இருக்கும் சிம்பு, அவர் வேலை செய்யும் இடமான மும்பைக்கு செல்கிறார்.

அங்கு பரோட்டா கடையில் வேலை செய்யும் சிம்பு, எதிர்பாராத விதமாக கேங்ஸ்டர் கும்பலில் சேர்கிறார். இறுதியில் சிம்புவின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிம்பு, ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதல் பாதியில் வெகுளித்தனமாகவும், இரண்டாம் பாதியில் மிடுக்கான நடிப்பையும் கொடுத்து இருக்கிறார். காதல் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சித்தி இதானி முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார் ராதிகா. ஜாபரின் நடிப்பு தியேட்டரில் விசில் பறக்கிறது.

காதல், கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கவுதம் மேனன். தன்னை விட அதிக வயது கொண்ட காதலி, ஸ்டைலிஷான வசனங்கள் என தனக்கே உரிய பாணியில் திரைக்கதை அமைத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து இருக்கிறார். பல காட்சிகளை சிங்கிள் ஷாட்டில் எடுத்து இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசை கூடுதல் பலம். சித்தார்தாதாவின் ஒளிப்பதிவு சிறப்பு. மொத்தத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ வென்றது.

 venthu thanithadhu kaadu movie review

venthu thanithadhu kaadu movie review