தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார். விஜய்யின் உறவினரான XB பிலிம்ஸ் கிரேட்டர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் விஜய் படத்தின் பாடல் ஒன்று 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்திருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
அதாவது பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள வெறித்தனம் என்ற பாடல் நூறு மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன், தெறி படத்தில் என் ஜீவன் ஆகிய பாடல்கள் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இருந்தன.
100 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற விஜய்யின் பாடல்களில் வெறித்தனம் பாடல் மூன்றாவது பாடல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.