Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மிகவும் பதட்டமாக உள்ளேன்.. கவனம் பெறும் சமந்தா பதிவு..

Very nervous.. Samantha's post that gets attention

இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் ‘யசோதா’. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘யசோதா’ படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி வைரலானது. இதனிடையே நடிகை சமந்தா சிகிச்சை எடுத்துக் கொண்டு டப்பிங் பேசிய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து நடிகை சமந்தா பல்வேறு புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இவரின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “ரொம்ப பதட்டமாகவும் எதிர்பார்ப்புடனும் உள்ளேன். இன்னும் ஒரு நாள் தான். என்னை போலவே என் படக்குழுவினரும் நாளை உங்கள் விமர்சனத்திற்காக காத்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது கவனம் பெற்று வருகிறது.

‘யசோதா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.