Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

போஸ் வெங்கட் இயக்கிய மா.பொ.சி படம் குறித்து வெளியான அப்டேட்,வைரலாகும் பதிவு

Vetri maran Release Bose Venkat in Upcoming Movie update

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்து சின்னத்திரையிலும் சீரியல்களில் நடித்து வந்தவர் போஸ் வெங்கட். தமிழ் சினிமாவில் கன்னி மாடம் என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

வித்தியாசமான கதை களத்துடன் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் மா.பொ.சி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நடிகர் விமல் உட்பட பலர் நடித்துள்ள நிலையில் சிறந்த திரைப்படங்களாக இயக்கி வரும் வெற்றிமாறனின் கிராஸ் ட்ரூட் நிறுவனம் இந்த படத்தை வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வெற்றிமாறன் வெளியீடு என்பதால் நிச்சயம் இந்த திரைப்படத்தின் கதைக்களமும் வித்தியாசமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.