தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் வடசென்னை.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
வட சென்னை 2 எப்போது வரும் என தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்த நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார் வெற்றிமாறன்.
அதாவது வடசென்னை 2 திரைப்படம் வெளியாக நீண்ட காலமாகும், இதனை வெப் சீரியஸாகவும் உருவாக்க திட்டமுள்ளது. ஆனால் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.