Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஓடிடியில் முதலிடம் பிடித்த விடாமுயற்சி.. முழு விவரம் இதோ.!!

vidamuyachi movie in first place for netflix

வெளியான வேகத்தில் ஓடிடியில் விடாமுயற்சி திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஆரவ், அர்ஜூன், ரெஜினா, திரிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் நேற்று netflix ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. திரையரங்கில் கொடுத்த ஆதரவை தொடர்ந்து ரசிகர்கள் ஓடிடியிலும் கொண்டாடி வருகின்றனர் என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்திய அளவில் netflix தளத்தில் நம்பர் 1 இடத்தை விட முயற்சி திரைப்படம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vidamuyachi movie in first place for netflix