Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கையில் பேக் உடன் அஜித், விடாமுயற்சி பர்ஸ்ட் லுக் போஸ்டரை கலாய்க்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக விடாமுயற்சி என்ற திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க ஆரவ், அர்ஜூன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று இரவு ஏழு மணிக்கு ஒளிபரப்பாகிய நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பது காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அஜித் கையில் பேக் உடன் நடந்து வருவது போன்ற ஒரு புகைப்படம் தான் ஃபர்ஸ்ட் லுக் என வெளியாகி உள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பாரதி கண்ணம்மா சீரியலை ஞாபகப்படுத்துவதாக மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

அதே சமயம் உண்மையாகவே விடாமுயற்சி படத்திலிருந்து தான் இந்த போட்டோவை எடுத்தீங்களா இல்ல அவர் எங்கேயாவது ட்ரிப் போயிருக்கும் போது எடுத்ததா? எனவும் சந்தேகத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.