தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.
அதன் பிறகு வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சிம்பு நடிப்பில் பத்து தல திரைப்படம் வெளியாக உள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தை ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படம் மார்ச் 30ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் இந்த படத்துடன் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள விடுதலை திரைப்படம் மோத இருப்பதாக தெரியவந்துள்ளது.
விடுதலை படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருப்பதால் நிச்சயம் பத்து தலை படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படங்களின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
