தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி கதாநாயகனாக நடித்திருக்கும் “விடுதலை” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது.
இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வழங்க உள்ளது. இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாவது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் தனுஷ் பாடியிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இம்மாதம் வரும் 8 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viduthalai First Single to be out on February 8 ! #Viduthalai #VetriMaaran @ilaiyaraaja @sooriofficial @elredkumar @VijaySethuOffl @VelrajR @PeterHeinOffl @BhavaniSre @mani_rsinfo @rsinfotainment @RedGiantMovies_ pic.twitter.com/fs6LoR2Uba
— MiniByteCinema (@MiniByteCinema) February 3, 2023