தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 31ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
இப்படம் தொடர்ந்து வசூல் வேட்டையாடி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இப்படத்தில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் பத்து நிமிட காட்சியின் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் ரயில் விபத்து ஏற்படுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
Fact: #Vetrimaaran initially had no plan to shoot the opening train blast sequence in #ViduthalaiPart1. It was just going to be another dialogue in the film. After watching the rushes, the producers agreed & it was shot on a budget of 7 crores. pic.twitter.com/5jB37Rfz5e
— Siddarth Srinivas (@sidhuwrites) April 3, 2023