தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான ‘விடுதலை-1’ திரைப்படத்தின் முதல் பாகம் வசூல் வேட்டையாடி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இளையராஜா இசையமைப்பில் தரமான திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ரஜினி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். மேலும் இப்படம் தெலுங்கிலும் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகிய விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Director #VetriMaaran enacting and making it easy for the artists, which has resulted in the raw and insanely realistic scenes in #ViduthalaiPart1 🔥#ViduthalaiPart1MegaBLOCKBUSTER
An @ilaiyaraaja Musical@VijaySethuOffl @sooriofficial @BhavaniSre @Chetan_k_a @VelrajR pic.twitter.com/qF6qgKojHo
— RS Infotainment (@rsinfotainment) April 10, 2023