கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி இயக்குனராக திகழும் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் முதல் பாகத்தின் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இளையராஜா இசையமைப்பில் தனுஷ் பாடி இருக்கும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ஒன்னோட நடந்தா பாடல் நேற்றைய முன்தினம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்பாடல் தற்போது வரை 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதாக புதிய தகவலை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
With 2M+ views #OnnodaNadandhaa is surely spreading its magic.
Listen to the song now – https://t.co/iAWyAMV2Ch@ilaiyaraaja @dhanushkraja #AnanyaBhat #Suka #VetriMaaran @elredkumar @VijaySethuOffl @rsinfotainment @BhavaniSre @GrassRootFilmCo @SonyMusicSouth @@mani_rsinfo pic.twitter.com/XyyfiWY5iu
— Red Giant Movies (@RedGiantMovies_) February 9, 2023