கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி இயக்குனராக திகழும் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் “விடுதலை”. சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா 8 ஆம் தேதியான நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் வெளியான விடுதலை 1 திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக பார்வையாளர்களை கடந்திருப்பதாக படக்குழு அதிகாரமும் பூர்வமாக தெரிவித்துள்ளது. அதன்படி இப்படத்தின் ட்ரெய்லர் இதுவரை 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பது தெரியவந்துள்ளது.
With 9️⃣Million+ views & trending on #1, #ViduthalaiPart1 trailer is off to a great start 👏💥
Coming soon in theatres
▶️ https://t.co/ZRCvUpHi5G#VetriMaaran @ilaiyaraaja @VijaySethuOffl @sooriofficial @elredkumar @rsinfotainment @BhavaniSre @VelrajR pic.twitter.com/KOKjN577h1
— Red Giant Movies (@RedGiantMovies_) March 9, 2023