விடுதலை முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் தொடர்கிறது. முதல் பாகத்தில் வாத்தியராக இருக்கும் விஜய் சேதுபதியை கைது செய்யப்படுகிறார். அதன் தொடர்ச்சியாக அவரை மலையில் இருந்து போலீஸ் அதிகாரி சேத்தன் மற்றும் சூரி உள்ளிட்ட காவல் துறையினர் கீலே அழைத்து வருகிறார்கள். செல்லும் வழியில் விஜய் சேதுபதி தான் எப்படி மக்கள் படை தலைவனாக மாறினார் என்பதை சொல்லிக் கொண்டே வருகிறார். மேலும் விஜய் சேதுபதியின் கூட்டாளிகள் அவரை விடுவிக்க திட்டம் போடுகிறார்கள். இறுதியில் விஜய் சேதுபதியை காவல் துறையினர் கீழே அழைத்து வந்து ஜெயிலில் அடைத்தார்களா? விஜய் சேதுபதியை அவரது கூட்டாளிகள் காப்பாற்றினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.நடிகர்கள்படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விஜய் சேதுபதி, வாத்தியாராக வாழ்ந்து இருக்கிறார். கெட்டதை தட்டி கேட்க ஆரம்பித்து, கட்சியில் இணைந்து மக்களுக்காக போராடும் தலைவனாக மாறி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் மஞ்சு வாரியர், தவறு செய்யும் தன் குடும்பத்தை, எதிர்த்து போராடும் துணிச்சலான பெண்ணாக நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார்.
குறிப்பாக விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் காதல் காட்சிகள் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. போலீசாக வரும் சூரிக்கு இந்த பாகத்தில் அதிகம் வேலை இல்லை. இருப்பினும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். விஜய் சேதுபதியை பிடித்து கொடுத்து தவறு செய்து விட்டோம் என்று உணரும் காட்சியில் கவர்ந்து இருக்கிறார். பவானி ஶ்ரீயும் குறைந்த காட்சிகளில் மட்டுமே வந்து சென்று இருக்கிறார்.வசனம் அதிகம் இல்லாமல் அனைவரையும் மிரட்டி இருக்கிறார் சேத்தன். மற்ற கதாபாத்திரங்களின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
இயக்கம்விடுதலை முதல் பாகத்தில் சூரி, பவானி ஶ்ரீ காதல், போலீஸ் கேம்ப்பில் நடக்கும் அநியாயம், விஜய் சேதுபதியை தேடும் வேட்டை ஆகியவற்றை படமாக்கி இருந்தார். ஆனால், இந்த பாகத்தில் விஜய் சேதுபதி எப்படி வாத்தியாராக மாறினார், மக்களுக்கான போராட்டம், அதிகார வர்க்கத்தினர் ஆளுமை, அரசியல் என திரைக்கதை அமைத்து இருக்கிறார். படம் முழுக்க கம்யூனிஸ்ட் அரசியல் பேசி இருக்கிறார். மக்களுக்கான போராட்டத்தில் மக்கள் தான் இறங்கி போராட வேண்டும் என்று இறுதியில் சொல்லிருப்பது பாராட்டுக்குரியது.ஒளிப்பதிவுவேல்ராஜின் ஒளிப்பதிவு காடு, மலை ஆகியவற்றை அழகாக படம் பிடித்து இருக்கிறது. குறிப்பாக சண்டை காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்.இசை இளையராஜாவின் இசை படத்திற்கு பிறகு பலம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார்.”,